Archives: செப்டம்பர் 2024

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிருபையின் செயல்பாடுகள்

அபௌட் கிரேஸ் என்ற நாவலில், டேவிட் விங்க்லர் தன்னை பிரிந்த மகளைக் கண்டுபிடிக்க ஏங்குகிறார், அவருக்கு உதவக்கூடிய ஒரே நபர் ஹெர்மன் ஷீலர் மட்டுமே. ஆனால் ஒரு தடை உள்ளது. ஹெர்மனின் மனைவியுடனான தவறான தொடர்பில்தான் டேவிட்டின் மகள் பிறந்தாள், மேலும் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஹெர்மன் எச்சரித்திருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து டேவிட், ஹெர்மனிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். மேலும் அவர், "என் வாழ்க்கையில் ஒரு வெறுமை உண்டு, காரணம் என் மகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது" என்று அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறார். ஹெர்மன் தனக்கு உதவுவாரா என்று காத்திருக்கிறார்.

நமக்கு அநீதி இழைத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? தனது எதிரிகள் அற்புதமாக அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலின் ராஜா இந்த கேள்வியை எதிர்கொண்டார் (2 இராஜாக்கள் 6:8-20). "நான் அவர்களை வெட்டிப் போடலாமா" என்று எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்கிறார். இல்லை, எலிசா கூறுகிறார். "இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்" (வ. 21-22). இந்த கிருபையின் செயல்  மூலம், இஸ்ரவேல் தனது எதிரிகளுடன் சமாதானம் காண்கிறது (வ. 23).

டேவிட்டின் கடிதத்திற்கு ஹெர்மன் பதிலளித்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்து உணவும் வழங்குகிறார். “ஆண்டவராகிய இயேசு, இத்தனை வருடங்களாக என்னையும் டேவிட்டையும் பராமரித்ததற்காக உமக்கு நன்றி” என்று அவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஜெபிக்கிறார். டேவிட் தனது மகளைக் கண்டுபிடிக்க உதவுகிறார், பின்னர் டேவிட் ஹெர்மனின் உயிரைக் காப்பாற்றுகிறார். தேவனின் கரங்களில், நமக்கு அநீதி இழைத்தவர்களிடம் நாம் காட்டும் கிருபையின் செயல்கள் பெரும்பாலும் நமக்கு ஆசீர்வாதமாக விளைகின்றன.

தேவனுடன் ஒரு காணொளி அழைப்பு

2022 ஆம் ஆண்டு என் மனைவிக்கும் எனக்கும் மிகவும் விசேஷித்த ஆண்டு. அந்த ஆண்டுதான் எங்கள் பேத்தி சோபியா ஆஷ்லி பிறந்தாள். எங்கள் எட்டு பேரக்குழந்தைகளில் அவள்தான் ஒரே பேத்தி. சோபியாவின் தாத்தா பாட்டி புன்னகையை நிறுத்தவில்லை! எங்கள் மகன் காணொளி அழைப்பின் மூலம் அழைக்கும் போது, ​​குதூகலம் இன்னும் அதிகமாகிறது. நானும் என் மனைவியும் வெவ்வேறு அறைகளில் இருக்கலாம், ஆனால் அவளது சந்தோஷமான கூச்சல், சோபியா அவளைப் பார்க்கிறாள் என்பதை வெளிப்படுத்தும். தொலைவிலிருக்கும் நமது பிரியமானவர்களைப் பார்ப்பதற்கு ஒரு அழைப்பு அல்லது ஒரு சொடுக்கு மட்டுமே போதும்.

நாம் தொலைப்பேசியில் பேசும் நபரைப் பார்க்கும் திறன் ஒப்பீட்டளவில் புதியது, ஆனால் தேவனுடனான காணொளி அழைப்பு அதாவது அவரது பிரசன்னத்தில் மனமார்ந்த விழிப்புணர்வுடன் ஜெபித்தல் என்பது பழையது. 27ஆம் சங்கீதத்தில் தாவீதின் ஜெபத்தில், நெருக்கமான மனிதர்களின் திறனுக்கு அப்பாற்பட்ட ஒத்தாசை தேவைப்படுகிற எதிர்ப்பலையின் மத்தியில் (வ. 10-12) எழுப்பப்பட்ட குரல் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியது: “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே (வ.8).

"அவருடைய முகத்தைத் தேட" (வ. 8) கடினமான நேரங்கள் நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால், "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (16:11) என்று போற்றப்படுகின்ற ஒருவருடன் முகமுகமாக துன்பத்தில்தான் ஐக்கியம் கொள்ளவேண்டும் என்றில்லை. நீங்கள் கூர்ந்து கவனித்தால், எந்த நேரத்திலும், "என் முகத்தைத் தேடுங்கள்" என்று அவர் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.

 

குழந்தை இயேசுவை வரவேற்றிடுங்கள்

கர்ப்பிணிப் பெண்ணான எங்களின் அயலகத்தார் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்திக்காக நாங்கள் நீண்டகாலம் காத்திருப்பது போல் உணர்ந்தேன். "பெண் குழந்தை!" என்று அவர்களின் வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் ஒரு அடையாளத்தை இறுதியாக வைத்த போது, அவர்கள் மகளின் பிறப்பைக் கொண்டாடினோம். மேலும் புல்வெளி காட்சியைப் பார்க்காத நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினோம்.

ஒரு குழந்தையின் வருகைக்காக பெரும் குதூகலம் காத்திருக்கிறது. இயேசு பிறப்பதற்கு முன்பு, யூதர்கள் ஏதோ சில மாதங்கள் மட்டும் காத்திருக்கவில்லை, தலைமுறை தலைமுறையாக இஸ்ரவேல்  எதிர்பார்க்கும் மீட்பரான மேசியாவின் பிறப்புக்காக ஏங்கினார்கள். ஆண்டுகள் கடந்து செல்ல,  உண்மையுள்ள யூதர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமோவென்று சந்தேகித்திருக்கலாம் என்று நான் கற்பனை செய்கிறேன்.

ஒரு நாள் இரவு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி வானத்தில் தோன்றியது, அப்போது ஒரு தூதன் பெத்லகேமில் மேய்ப்பர்களுக்குத் தோன்றி மேசியா இறுதியாகப் பிறந்தார் என்று அறிவித்தான். அவன் அவர்களிடம், "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்" (லூக்கா 2:12). மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்த்த பிறகு, அவர்கள் தேவனைப் புகழ்ந்து, பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (வ.17).

இயேசுவின் பிறப்பைப் பற்றி பிறரிடம் சொல்ல, வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிள்ளை பிறந்ததை மேய்ப்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இன்னும் அவருடைய பிறப்பைக் கொண்டாடுகிறோம், காரணம் அவரை விசுவாசிக்கிற எவருக்கும் இவ்வுலகின் மாறுபாட்டிலிருந்து அவரது ஜீவனானது மீட்பை வழங்குகிறது. நாம் சமாதானத்தை அறியவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும் இனியும் காத்திருக்க வேண்டியதில்லை, இதுவே அறிவிக்க ஏற்ற நற்செய்தியாகும்.